ஆட்சியமைக்க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு -உரிமை கோரல் கடிதத்தை ஏற்று நடவடிக்கை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உரிமை கோரல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2021-05-05 09:35 GMT
ஆட்சியமைக்க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு -உரிமை கோரல் கடிதத்தை ஏற்று நடவடிக்கை 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உரிமை கோரல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். இருவரும் பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்திக் கொண்டனர். மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி ஆளுநர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் உரிமை கோரினார். அத்துடன் எம்.எல்.ஏக்களின் தீர்மான கடிதத்தையும் ஆளுநரிடம் ஸ்டாலின் வழங்கினார்.  இந்த சந்திப்பின் போது, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஸ்டாலினுடன் இருந்தனர். இதனிடையே ஆளுநரின் தனிசெயலாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுப்பதற்கான கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்