கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் சூதாட்டம்
சென்னையில் மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னையில் மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...சென்னை தியாகராயநகரில் வசித்து வருபவர் ஜித்து... வட மாநிலத்தை சேர்ந்த இவர், அடிக்கடி ஹூக்கா பார்களுக்கு செல்லும் பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது.அவ்வாறு அங்கு செல்லும்போது, சுரேஷ் என்பவரின் நட்பு இவருக்கு கிடைத்துள்ளது. பழக்கத்தை தொடர ஆன்லைன் சூதாட்டத்தை ஜித்துவுக்கு, சுரேஷ் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.இதனைத் தொடந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டு போட்டிகளிலும், தங்கத்தின் விலையேற்ற இறக்கத்துக்கும் பந்தயம் கட்டி விளையாடி வந்துள்ளார் ஜித்து....நாளடைவில் சூதாட்ட விளையாட்டு, வழக்கம்போல், விபரீதத்தில் முடிந்துள்ளது.பல லட்சம் ரூபாயை இழந்துவிட்டதாக ஜித்து போலீசில் புகார் அளித்த நிலையில், அமைந்தகரை போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தினர்.ஜித்துவின் நண்பர் சுரேசை போலீசார் விசாரித்தபோது, lotus book 237 என்ற பிரத்யேக இணைய தளம் வாயிலாக சூதாட்டம் அரங்கேறியது கண்டறியப்பட்டு உள்ளது.அந்த இணையதளத்தில் உள்ளே சென்று உறுப்பினராக வேண்டும் என்றாலே, லட்சங்களை கொட்ட வேண்டும் என்பதும் தெரிய வந்துள்ளது.இது மட்டுமின்றி, சென்னை முழுவதும் ஏராளமான வி.வி.ஐ.பி-கள் மற்றும் தங்க வியாபாரிகளும், இந்த இணையதளத்தை பயன்படுத்தி சூதாடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது, சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விரிவான விசாரணையில், இன்னும் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.