வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு - டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி வரும் டிசம்பர் 1-ஆம் தேதி தேதி முதல், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-22 14:00 GMT
பாட்டாளி மக்கள் கட்சி  மற்றும் வன்னியர் சங்கம் கூட்டு பொதுக்குழு கூட்டம்  மற்றும் இணையவழி கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அப்போது  தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கை உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர்  1 ந்தேதி முதல்  முதற்கட்ட தொடர் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. டிசம்பர் 31-ந்தேதி வரை அனைத்து பணி நாட்களிலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய  தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில்  வரும் ஜனவரி மாத பிற்பாதியில் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய அறப்போராட்டத்தை நடத்துவதென்றும்  பாமக -வன்னியர் சங்கம்  கூட்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் இணைய வழி கலந்தாய்வில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்