அரசு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை - தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை
அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டுமென தமிழக அரசு நேரம் நிர்ணயித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள், உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக பட்டாசு வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.