ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரி வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் முறையீடு
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை கோரும் வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு ஏற்றது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில், பணத்தை இழந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்கால தலைமுறையினர், எளிதாக சூதாட்ட வலையில் விழுந்து விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை செய்யக் கோரி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தார். இதை கேட்டறிந்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். மேலும், அந்த மனுவை நாளை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.