செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, சென்னையைச் சேர்ந்த 2 பெண் காவலர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் காவல் துறையினருக்கு எந்தவித வசதியும் செய்து தராத அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்குவதுடன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.