வரிசையாக 50 குழந்தைகளை தூக்கி கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்த மக்கள் - அதிர்ச்சி காரணம்
ராஜதானிக்கோட்டை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு, சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திடீரென மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெற்று வரும் சூழலில், தமிழக அரசு மருத்துவ வல்லுனர் குழுவினர் மூலம் சிறப்பு முகாம் நடத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், குடிநீரை பரிசோதனை செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.