பிரதமரின் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 4 பேர் கைது - சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-23 02:32 GMT
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பிரதமரின் கிசான் திட்டத்தில் போலி நபர்களை சேர்த்ததாக புகார் எழுந்தது.  விவசாயி அல்லாதோர் நிதி உதவி பெற்றதை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், ஒப்பந்த ஊழியர்களான, திருநாவலூரைச் சேர்ந்த, பயிர் அறுவடை பரிசோதகர்கள் மாரிமுத்து,
கலைச்செல்வன், மணிகண்டன் மற்றும் தனியார் பயிர் காப்பீட்டு நிறுவன முகவர் சிலம்பரசன், ஆகியோர், இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், 4 பேரும் திருநாவலூர் வட்டாரத்தில், விவசாயிகள் அல்லாதவர்கள் ஆயிரத்து 500 பேரை, இத்திட்டத்தில் முறைகேடாக சேர்த்து பணம் பெற்றிருப்பது தெரியவந்தது. 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்