தமிழகத்தில் நீட் தேர்வு நிறைவு - தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வை ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெற்ற தேர்வில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் பங்கேற்றனர். சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோவை, கரூர், திருவள்ளூர் , கடலூர், நாமக்கல் , காஞ்சிபுரம், வேலூர் , கன்னியாகுமரி , தஞ்சாவூர் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உடல் வெப்ப பரிசோதனைக்கு செய்யப்பட்டு, முககவசம் அணிந்த மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணி தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.