தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குனர் காலமானார் - பாலசுப்பிரமணியம் மறைவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

தஞ்சையில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தென்னக பண்பாட்டு மையம் அமைந்துள்ளது.

Update: 2020-09-06 11:03 GMT
தஞ்சையில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தென்னக பண்பாட்டு மையம் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட 8 மாநில மக்களின் பண்பாட்டு கலாச்சார மையாமாக இயங்கி வருகிறது. இந்த பண்பாட்டு மையத்தின் இயக்குனராக கடந்த 2018ம் ஆண்டு முதல் பணியாற்றி  வந்த கேரளாவை சேர்ந்த பாலசுப்பிரமணியம், கடந்த சில நாட்களாக நுரையீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருக்கு கொரோனா தொற்று  இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், இவரது மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்