விபத்தில் கைமுறிந்த பெண்ணுக்கு தவறான சிகிச்சை - கோமா நிலைக்கு சென்றவர் உயிரிழப்பு

பெண் சாவுக்கு காரணமான தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

Update: 2020-09-05 06:11 GMT
திருவண்ணாமலை அடுத்த வடபுழுதியூர் மதுரா மேட்டுத்தெருவை சேர்ந்த சின்னப்பன் மனைவி விண்ணரசி தனது மைத்துனருடன் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார்.  போளுர் சாலையில் அவர்கள்  சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் விண்ணரசிக்கு கைகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து , தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விண்ணரசிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் கோமாவுக்கு சென்ற விண்ணரசி நினைவு திரும்பாமலேயே, வேலூர் தனியார் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்கு கொண்டு செ​ல்லப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்க்ள திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடற்கூராய்வுக்கு பின்னர் உடலை வாங்க மறுத்து விண்ணரசியின் உறவின​ர்கள், அரசு மருத்துவமனையின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து,  விண்ணரசியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்