சாலையில் வீசப்படும் கொரோனா பாதுகாப்பு உடைகள் - உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டில் பயன்படுத்தப்பட்ட கொரோனா பாதுகாப்பு உடைகளை சாலையில் வீசி செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2020-09-02 04:57 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உடைகளை பயன்படுத்துவோர் பணி முடிந்து வீடு திரும்பும்போது, சாலை ஓரங்களிலேயே அவற்றை வீசி செல்கின்றனர். மாமண்டூர் மேம்பாலம் முதல் பரனூர் சுங்கச்சாவடி வரை இவ்வாறு உடைகள் வீசப்படுகின்றன. இந்த உடைகளை அங்கு சுற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்து அணிவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு உணவளிக்க வரும் தன்னார்வலர்களுக்கும் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு உடைகளை வீசி செல்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்