முதன் முறையாக டெலிமெடிசின் அறிமுகம் - கொரோனா நோயாளிகளுக்காக புது முயற்சி
கொரோனா சிகிச்சைக்காக கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக டெலிமெடிசின் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது கொரோனா சிகிச்சைக்கு டெலிமெடிசின் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அதற்குரிய மருத்துவ ஆலோசனையை 24 மணி நேரமும் காணொலியில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிகிறது. கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி தனியார் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வசதியும் இதில் உள்ளது. மருத்துவ பணியாளர்களின் நேரடி தொடர்பை குறைக்கும் பொருட்டு ரோபோட்டிக்ஸ் தட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் விரைவில் தொற்றை கட்டுப் படுத்தவதோடு நோய் தாக்கத்தின் அளவை குறைக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்