கருப்பாநதி அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்
மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த வாரம் பெய்த கனமழையினால், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கருப்பாநதி அணையின் முழு கொள்ளளவான 72 அடியில் 70 வரை நீர் தேங்கியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த வாரம் பெய்த கனமழையினால், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கருப்பாநதி அணையின் முழு கொள்ளளவான 72 அடியில் 70 வரை நீர் தேங்கியது. இதனால் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி அப்பகுதி விவசாயிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். தண்ணீரை திறந்து விடக்கோரி முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.