"ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு காக்க வேண்டும்" - திரைப்பட இயக்குனர் கவுதமன் கோரிக்கை

அனைத்து வகை வாகனம் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் இ பாஸ் முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் அனைத்து வகை வாகனங்களுக்கான சாலை வரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-08-20 10:11 GMT
அனைத்து வகை வாகனம் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் இ பாஸ் முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் அனைத்து வகை வாகனங்களுக்கான சாலை  வரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் கவுதமன் தலைமையில் நடந்த  இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் அதிகமான ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவுதமன் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 12 லட்சம்  வாகன ஓட்டுனர்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்