ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்த படகு - உயிர் தப்பிய 4 மீனவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகில் ஆழ்கடலுக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகில் ஆழ்கடலுக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வழக்கம்போல் மீன் பிடித்து விட்டு கரையை நோக்கி திரும்பி கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. உடனடியாக கரையில் இருந்த சக மீனவர்கள் கவிழ்ந்த படகினை நிமிர்த்தி அதற்குள் சிக்கிய மீனவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர். இதில் 4 மீனவர்களில் 2 பேருக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதால் மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.