சென்னை- 11,209 பேருக்கு கொரோனா சிகிச்சை
சென்னையில் மொத்தம் 11 ஆயிரத்து 209 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் 11 ஆயிரத்து 209 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டலம் வாரியாக அதன் விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில், 4 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாக, மாநகராட்சி தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் ஆயிரத்து 492 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 279 பேரும், அண்ணா நகரில் ஆயிரத்து 160 பேரும், அடையாறில் ஆயிரத்து 79 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் ஆயிரத்துக்கும் குறைவான நபர்களே சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.