5 ஆயிரத்தை கடந்துள்ள பாதிப்பு எண்ணிக்கை - ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்ட 28 கிராமங்களில் முழு ஊரடங்கு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று முதல் வரும் ஒன்றாம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-07-27 08:54 GMT
விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொற்று வேகம் அதிகரித்துள்ளதுடன் காவலர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்காலிக காய்கறி சந்தை  வியாபாரிகள் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் ஆகஸ்ட் ஒன்றாம் ஒன்றாம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டத்தில் 28 கிராமங்களில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பால் மற்றும் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட வர்த்தகர்ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் நடமாட்டமில்லாமல் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்