தேனி - ஒரே நாளில் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 572 பேர் குணமடைந்துள்ள நிலையில், 22 பேர் பலியாகி உள்ளனர், நோய்த்தொற்றை தடுக்க முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவது கட்டாயம் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை - மேலும் 132 பேருக்கு கொரோனா :
இன்று காலை நிலவரப்படி 132 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு 815 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 804 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் நெல்லை மாவட்டத்தில், 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
வேலூரில் வேகமெடுக்கும் கொரோனா
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேலும் 148 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பானது, 2 ஆயிரத்து 922 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரத்து 293 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், ஆயிரத்து 602 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக உள்ளது.