சாத்தான்குளம் சம்பவம் : இன்றே சிபிசிஐடி விசாரணையை தொடங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

சாத்தான்குளம் சம்பவம் குறித்து நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இன்றே விசாரணையை தொடங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-06-30 08:16 GMT
* சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. 

* அப்போது, தூத்துக்குடி ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். 

* இருவரின் முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை, நிதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதன்  அடிப்படையில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

* சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது என்றனர். 

*  இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் மோசமான காயங்கள் இருந்ததால், காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

* நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்ட ஏடிஎஸ்பி குமார்,டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகிய மூவர் தரப்பிலும் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்து, 4 வாரத்தில் விளக்கமளிக்க  உத்தரவிட்டனர். 

* மேலும், இந்த வழக்கில் ஒரு நொடிக்கூட வீணாகமல் விசாரணை நடைபெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

* இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக கூறிய நீதிபதிகள், 

* அதுவரை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், இந்த வழக்கின் விசாரணையை இன்றே தொடங்க உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்