வாழ்வாதாரம் இல்லாத ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை

புதுக்கோட்டையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆட்டோ ஸ்டாண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-06-26 07:30 GMT
மச்சுவாடியை சேர்ந்த சுப்பிரமணியன், மனைவி மற்றும் மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் அவர்,  வங்கி கடன் மூலம், சொந்தமாக ஆட்டோ வாங்கி தவணை செலுத்தி வந்துள்ளார்.  பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில், ஆட்டோ ஓட்டிய அவர், ஊரடங்கால், வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தார். கடந்த மாதம் ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்கிய நிலையில், மக்கள் நடமாட்டம் இன்றி வருவாய் இல்லை. இதனிடையே, வாங்கிய பணத்தை செலுத்துமாறு கடன் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்து உள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணியன், ஆட்டோ நிறுத்தத்தில் தூக்கிட்டுள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடடினயாக மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார். இந்நிலையில், சக ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் குடும்பத்தினருடன், புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகாரளிக்க திரண்டதால் பரபரப்பு நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்