கருந்திரி வெடி விபத்து - கணவன், மனைவி காயம் : மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

அருப்புக்கோட்டையில் கருந்திரி தயாரிப்பின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கணவன் மனைவி படுகாயமடைந்தனர்.

Update: 2020-06-24 11:25 GMT
அருப்புக்கோட்டையில் கருந்திரி தயாரிப்பின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கணவன் மனைவி படுகாயமடைந்தனர். MDR நகர் 7வது தெருவில் வசித்து வரும், கந்தவேல் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் ஆகிய இருவரும், பட்டாசுகளுக்கு தேவையான கருந்திரியை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது விபத்து நிகழ்ந்து, வீடு முழுவதும் பரவியது. இருவரின் அலறல் சத்தம் கேட்ட, அக்கம் பக்கத்தினர் உடனடியாக காப்பாற்றி, 
சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்