கிராமப்புற பேருந்து போக்குவரத்து தடை - முடிவுக்கு வராத சாலைவழி நடைபயணம்
திருப்பூரில் கிராமப்புற பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சாலையில் சாரை சாரையாக நடந்து செல்கின்றனர்.
இரு மாவட்ட எல்லை பகுதியான மடத்துக்குளத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிராமப்புற பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சுமார் இரண்டு கிலோமீட்டர் சாலைவழியில் நடைபயணம் மேற்கொள்கின்றனர். உடுமலை ,பொள்ளாச்சி பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள், வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மடத்துக்குளம் பேருந்து நிலையத்தோடு திரும்பும் பேருந்துகள் ஆற்றுப்பாலம் வரை சென்றால் கூட தங்களுக்கு ஏதுவாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர். பேருந்து போக்குவரத்து தொடங்கியும், சாலை வழி நடைபயணம் இன்னும் முடிந்தபாடில்லை என்பதே அப்பகுதி மக்களின் வேதனை குரலாகும்.