சித்த மருத்துவர் தணிகாச்சலம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு - தமிழக அரசு, காவல் துறை பதிலளிக்க 2 வாரம் அவகாசம்
சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு மற்றும், சென்னை காவல் ஆணையருக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு மற்றும், சென்னை காவல் ஆணையருக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருத்தணிகாச்சலத்தின் தந்தை கலியபெருமாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிகாச்சலத்தின் தகுதி குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வைத்தியர் குடும்பத்தில் பிறந்து மருத்துவம் பார்த்தாலும், போலி மருத்துவர் தான் என உச்ச நீ்திமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகச் சுட்டிக் காட்டினர். மேலும், பரம்பரை மருத்துவர் என வழங்கப்படும் சான்றிதழ்களுக்கும் எந்த மதிப்பும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை, வரும் 23ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.