"தெலுங்கானாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து" : தமிழகத்தில் தேர்வு நடத்துவது சரியா? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

தெலுங்கானாவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் போது தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-06-08 17:24 GMT
கொரோனா தொற்றால், 3 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானாவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் போது, 33 ஆயிரத்து 229 பேர் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் தெலங்கானா முதலமைச்சர் காட்டும் வழியையாவது தமிழக முதலமைச்சர் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்