வழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி பாலியல் தொந்தரவு - இளம்பெண் புகாரின் பேரில் வழக்கறிஞர் கைது

ராமநாதபுரத்தில், வழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-06-08 03:49 GMT
ராமநாதபுரத்தில், வழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினார்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண், வழக்கு விஷயமாக பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த் என்பவரை அணுகி உள்ளார். வழக்கை நடத்த பணம் பெற்றுக்கொண்ட அரவிந்த், அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு அந்த பெண்ணின் தங்கையையும், ஆசைக்கு இணங்க வைக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அரவிந்த் கைது செய்யப்பட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்