3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு
தமிழகம் முழுவதும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக விக்ரம் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு சுற்றுச்சூழல், வனத் துறை கூடுதல் தலைமை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவுக்கு தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மின்பகிர்மான கழக நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது