"பொறுமையை சோதிக்கும் கோவை நடவடிக்கை" - அமைச்சர் வேலுமணி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால், கைதான தி.மு.கவினரை விடுதலை செய்ய வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-06-06 03:02 GMT
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல்ரீதியாக விமர்சிப்பவர்களைப் பழிவாங்குவதிலும் அமைச்சர் வேலுமணி கைதேர்ந்தவராக இருப்பதாக குற்றம்சாட்டினார். அதன் ஒரு பகுதிதான், கோவையில் அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தி.மு.க வினர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா காலத்தில் போராட்டங்கள் வேண்டாம் என்றால், கோவையில் நடைபெறும் நடவடிக்கைகள் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இனிமேலும், தி.மு.கவினர் கைது செய்யப்பட்டால், நானே கோவைக்கு வந்து மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என எச்சரித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்