வருமானமின்றி கைத்தறி நெசவாளர்கள் தவிப்பு - நிவாரணம் வேண்டி அரசுக்கு கோரிக்கை
ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பெல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பெல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பிற மாவட்டங்களில் இருந்து கைத்தறி நெசவாளர்களுக்கு தேவையான பாவு நூல் கொண்டு வரப்படுவது தடைபட்டுள்ளதால், வேலையின்றி தவித்து வரும் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.