கடலூரில் நீதிபதி முன்பு மதுபாட்டில்களை அழிக்கும் பணி தீவிரம்
கடலூர் மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் உள்ள மதுபாட்டில்களை நீதிபதி முன்பு அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் உள்ள மதுபாட்டில்களை நீதிபதி முன்பு அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு சட்ட விரோதமாக வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் அவற்றை உடனடியாக அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து கடலூர் நீதிமன்ற வளாகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை நீதிபதி முன்னிலையில் காவலர்கள் அழித்து வருகின்றனர்.