பிரதமர் - முதலமைச்சர் தொலைபேசியில் ஆலோசனை - "தமிழகத்திற்கு கூடுதல் ரேபிட் டெஸ்ட் கிட் தேவை"

தமிழகத்திற்கு கூடுதல் ரேபிட் டெஸ்ட் கிட் வழங்குவதாக முதலமைச்சரிடம், பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Update: 2020-04-19 16:29 GMT
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி , முதலமைச்சர் பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், எதிர்காலத்தில் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம், முதலமைச்சர் விளக்கினார். அப்போது, தமிழகத்திற்கு  கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட் தேவைப்படுவதாக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்று கொண்ட பிரதமர், கூடுதல் ரேபிட் கிட் தருவதாக உறுதி அளித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்