பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்ற அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை முதல் செயல்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு பத்திரப்பதிவு எழுத்தர்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2020-04-19 11:47 GMT
பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை முதல் செயல்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு பத்திரப்பதிவு எழுத்தர்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போதிய பாதுகாப்பு, போக்குவரத்து , சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிப்பது சாத்தியமில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். விழுப்புரம், நாகை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பத்திரப்பதிவு ஆவண எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பலரும் இதே முடிவினை அறிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்