"கோயம்பேடு சந்தையில் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு" - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் ஏராளமான மக்கள் குவிந்து விடுவதால், கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, கெருகம்பாக்கம் சுற்றுவட்டார வியாபாரிகள் நலச் சங்கத்தின் துணை தலைவர் ஜெயசீலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்குவதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் தொழில் கடன்களுக்கான 3 மாத வட்டியை தள்ளுபடிசெய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.