முக்கிய ஏரிகளில் போதிய தண்ணீர் கையிருப்பு - அதிகாரிகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், மற்றும் புழல் ஏரிகளில் போதுமான அளவு நீர் கையிருப்பில் உள்ளது.

Update: 2020-04-14 12:03 GMT
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளான  செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், மற்றும் புழல் ஏரிகளில் போதுமான அளவு நீர் கையிருப்பில் உள்ளது.

3,231 மில்லியன் கன அடி கொண்ட பூண்டி ஏரியில் தற்போது  ஆயிரத்து 194 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருப்பதாகவும், அதேபோல, ஆயிரத்து 81 மில்லியன் கன அடி கொண்ட சோழவரம் ஏரியில்,  தற்போது 72 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

இதேபோல, செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்தமட்டில், மொத்த கொள்ளளவான, மூன்றாயிரத்து 645 மில்லியன் கன அடியில், இரண்டாயிரத்து 49 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், புழல் ஏரியில் இரண்டாயிரத்து 792 மில்லியன் கன அடி தண்ணீர் கையிருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இவை தவிர கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் கூட்டுக் குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாகவும் தண்ணீர் கிடைக்கப் பெறுவதால், சென்னையில் கோடை காலம் முழுவதையும் சமாளிக்க போதுமான நீர் கையிருப்பு உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

கடந்தாண்டை போல ரயில்கள் மூலமாக தண்ணீர் பெறக்கூடிய தேவை இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்