பசி பட்டினியால் வாடும் 10 திருநங்கைகள் - தமிழக அரசு உதவ கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 10 திருநங்கைகள், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பசியால் வாடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 10 திருநங்கைகள், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பசியால் வாடி வருவதாக தெரிவித்துள்ளனர். பத்து பேரில் 4 பேருக்கு மட்டுமே ரேசன் கார்டு உள்ளதாகவும், இதனால் அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் வாங்குவதற்கு கூட வழியில்லை என கூறும் அவர்கள், தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.