தேர்தல் ஆணையர்களின் சம்பளத்தில் இருந்து நிதிஉதவி தானாக முன்வந்து அளிக்க ஆணையம் முடிவு

தேர்தல் ஆணையர்களின் சம்பளத்தில் இருந்து நிதிஉதவி தானாக முன்வந்து அளிக்க ஆணையம் முடிவு.

Update: 2020-04-13 14:55 GMT
தேர்தல் ஆணையர்களின் சம்பளத்தில் இருந்து நிதிஉதவிதானாக முன்வந்து அளிக்க ஆணையம் முடிவு. கொரோனா நிதிக்காக, தேர்தல் ஆணையர்களின் ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி,இந்தியத் தேர்தல் ஆணைய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் எஸ்.அஷோக் லாவாசா மற்றும் எஸ்.சுஷில் சந்திரா ஆகியோருக்கு வழங்கப்படும் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் 1 முதல் ஒராண்டு காலம் இதை செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்