உதவி செய்வதை தடுக்க உத்தரவிடுவதா? - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

கொரோனா தொற்று காலத்தில் துன்பப்படும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும் போது, அதை தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-12 15:07 GMT
கொரோனா தொற்று காலத்தில் துன்பப்படும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும் போது, அதை தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தனிமனித இடைவெளி இல்லாமல் கூடுவோரை, காவல்துறையினர் ஒழுங்குப்படுத்தலாம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள் தரக்கூடாது  என எப்படி உத்தரவிட முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம் என்றும், இது ஜனநாயக நாடு, உதவி செய்யக்கூடாது என்பது சர்வாதிகாரத்தனம் என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்