கொரோனாவால் இறந்தவர் உடல் அடக்கம் : இறுதி சடங்கில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பா? - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மறுப்பு
ராமநாதபுரத்தில் கொரோனாவால் இறந்தவரின், இறுதி சடங்கில் தாம் பங்கேற்க வில்லை என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி ராமநாதபுரத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மரணத்தின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும், தற்போது கிடைத்த சோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, முதியவர் இறுதி சடங்கில் பங்கேற்ற உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் வீட்டில் தனித்திருக்க மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவுறுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் பங்கேற்றதாக செய்தி பரவியது. இதை மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன், இறந்த முதியவருக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.