"அனைத்து உழவர் சந்தைகளும் வழக்கம் போல் இயங்கும்" - கோவை மாவட்ட ஆட்சியர்
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளும் இன்று முதல் வழக்கம்போல இயங்கும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளும் இன்று முதல் வழக்கம்போல இயங்கும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகள் வழக்கம்போல இன்று முதல் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உழவர் சந்தை இன்று துவங்கியது. இந்த சந்தையை கோவை ஆட்சியர் ராசாமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் சிரவன்குமார் ஷெராவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராசாமணி, தேவைப்பட்டால், முக்கிய பேருந்து நிலையங்களிலும் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.