கொரோனா வைரஸ் பீதியின் எதிரொலி : "வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை" - சென்னை துறைமுக நிர்வாகம் உத்தரவு
கொரோனா பீதியின் காரணமாக, வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை என சென்னை துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பீதியின் காரணமாக, வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை என சென்னை துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, வருகிற 31ஆம் தேதி வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று துறைமுக டுவிட்டர் பக்கத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கப்பல் நிர்வாகம் மற்றும் அதன் உரிமையாளர்கள், வியாபாரிகள், பயணிகள் சங்கங்களுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.