கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து நாளை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்தவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவருக்கு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவாமல் தடுப்பது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.