பழனியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பழனியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது பொது மக்களை பரவசமடைய செய்தது.

Update: 2020-02-27 09:08 GMT
பழனியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது பொது மக்களை பரவசமடைய செய்தது. கோவையில் இருந்து தொடர்ந்து 44 ஆண்டுகளாக பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், அலகு குத்தி, பிரமாண்டமான பறவை காவடி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பக்தர்கள் அலகு குத்தி, அலங்கரிக்கப்பட்ட ராட்சத கிரேனில் தொங்கியபடி, கிரிவலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பிரமாண்டமான பறவைக்காவடியை பார்த்த பக்தர்கள், பரவசமடைந்து, சாமியை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்