“நான் சென்னை பையன்“-தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தமிழ் பாசம்...!
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீ லீலா நடனமாடியுள்ள இந்த பாடலுக்கு 'கிஸ்ஸிக்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியீட்டு விழா தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது... தொடர்ந்து பேசிய அல்லு அர்ஜுன், “நான் பிறந்த இந்த மண்ணுக்கு என் அன்பான வணக்கம்... என் தமிழ் மக்களே வணக்கம்... என் சென்னை மக்களே வணக்கம்... இந்த நாள் மறக்க முடியாத நாள்... எத்தனையோ வருடங்கள் இதை எதிர்பார்த்திருந்தேன்... நன்றி“ என்று கூறி சிலாகித்தார்... புஷ்பா பட ப்ரொமோஷனுக்காக நான் வெளிநாடுகளெல்லாம் சென்றிருந்த போதும் கூட... சென்னைக்கு வரும் போது அந்த ஃபீலிங்கே வேற... என்று பூரித்த அல்லு அர்ஜுன், இங்கிருந்து தான் தன் பயணம் துவங்கியதாக குறிப்பிட்டார்... தான் தி நகர் சென்னை பையன் தான் என்றும்... சென்னையில் படிக்கும் பொழுது கல்லூரியை கட்டடித்துவிட்டு ரஜினி படம் பார்க்கப் போவேன்...“ என்றும் கூறி மகிழ்ந்தார்... அப்போது ரசிகர்கள் தெலுங்கில் பேசுமாறு கூச்சலிட்ட நிலையில், “தமிழில் தான் பேச வேண்டும்... நாம் எந்த மண்ணில் இருக்கிறோமோ அந்த மண்ணில்... அந்த மொழியில் பேசுவது தான் நாம் அவர்களுக்குக் கொடுக்கும் கவுரவம்“ என்று கூறி மெய் சிலிர்க்க வைத்தார்...
புஷ்பா 2 சர்ச்சை...மேடையில் தேவி ஸ்ரீ பிரசாத் விரக்தி...
சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 பட நிகழ்ச்சியில் பேசிய அப்படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர் மீதான அதிருப்தியை சூசகமாக வெளிப்படுத்தி இருந்தார்... புஷ்பா 2 பட பின்னணி இசையை தேவி ஸ்ரீ பிரசாத் தாமதப்படுத்தியதாக விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில், தமன் பின்னணி இசையில் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் கிஸ்ஸிக் பாடல் சென்னையில் வெளியிடப்பட்ட நிலையில் மேடையில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், தான் பாடல், பின்னணி இசையை சரியான நேரத்தில் வழங்கவில்லை என குறை சொல்லும் தயாரிப்பாளர் ரவி... தன் மீது அன்பு வைத்திருந்தாலும்... அன்பு இருக்கும் இடத்தில் குறைகளும் இருக்கும் என்றும் விரக்தியை தெரிவித்ததுடன், இதுபோன்ற விஷயங்களை தான் மேடையில் வெளிப்படையாக பேசும்போது ஒரு கிக் தருவதாக குறிப்பிட்டார்... இதனிடையே அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தேவி ஸ்ரீ பிரசாத்தை படத்தில் இருந்து நீக்கி விட்டு தமன் மற்றும் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.