11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி - தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை என்றும், விரைவில் பணிகள் முடிவடைந்து, திறக்கப்படும் என கூறினார். தமிழகத்தில் புதிய 11 மருத்துவமனைகள் அமைக்கும் பணிக்கு மத்திய அரசின் அனைத்து அனுமதிகளும் கிடைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். மருத்துவக்கல்லூரிகள் அமைக்கும் பணி, போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.