சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : ஆவணங்கள் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு - விசாரணை அலுவலகம் விரைவில் துவக்கம்
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணை அலுவலகம் தக்கலையில் துவங்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த மாதம் 8-ந் தேதி சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கொலை செய்த அப்துல் ஷமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் 2 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்த போது அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைக்காக தக்கலையில் தற்காலிக அலுவலகம் ஒன்று துவங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் காவல்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.