சீறிப்பாய்ந்த காளைகள் - மடக்கி பிடித்த வீரர்கள்
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நெடுங்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நெடுங்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 350 காளைகள் மற்றும் 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த, ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
ஓசூர் : தேர்த் திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட விழா
ஒசூர் அருகே அகலகோட்டை கிராமத்தில் ஸ்ரீமாதேஸ்வரசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு எருதாட்டவிழா நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. கூட்டத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
வாணியம்பாடி : திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி
வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரத்தில், காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைப்பெற்றது. இதில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியின் இறுதியில், குறைவான நொடியில் இலக்கை கடந்த, 31 காளைகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.