அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு - வீரர்களுக்கு வெள்ளி, தங்க நாணயங்கள் பரிசு
திண்டுக்கல் மாவட்டம் ஆவாரம்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
போட்டியில் மதுரை, தேனி, புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 550 காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். போட்டியில் ஆக்ரோஷம் காட்டிய காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் உட்பட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.