சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-02-17 18:22 GMT
சேலத்தின் மையப்பகுதியான கோட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்ட தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்றது. திமுக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

* குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி  பழனியில்  இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. 

* உடுமலையில் சிஏஏவுக்கு எதிராகவும், வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கும் கண்டனம் தெரிவித்து, 700க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

* இதேபோல் தஞ்சையில், சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, கீழவாசல்  பகுதியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்  நீடிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்