போலீசாருடன் மனுதாரர் வாக்குவாதம் - ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், போலீசாரை தகாத வர்த்தைகளால் வசைபாடி, ரகளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-02-17 10:15 GMT
கொற்றிகோடு கிராமத்தை சேர்ந்த சுந்தர், குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலவலகத்திற்கு வந்துள்ளார். அவரது உடை, தோற்றத்தை பார்த்து சந்தேகம் அடைந்த பாதுகாப்பு போலீசார், சுந்தரை தடுத்து நிறுத்தினர். ஆத்திரம் அடைந்த அந்த நபர், காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் வசைபாடியதோடு, ரகளையில் ஈடுபட்டார். உடனடியாக அவரை பிடித்த போலீசார், நேசமணி காவல்நிலையத்திற்கு ஆட்டோவில் அழைத்து சென்றனர். அங்கு விசாரணை செய்ததில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததை தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்