சோதனைக்கு பயந்து ஆட்டோவை திருப்பியதால் விபத்து - ஆம்புலன்ஸ் மீது மோதி 10 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்து ஆட்டோவை, திடீரென திரும்பியபோது எதிரே வந்த, ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயம் அடைந்த 3 பேர், மேல் சிகிச்சைக்காக வேலூர் மற்றும் தருமபுரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விபத்துக்கு போலீசார் தான் காரணம் என கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.